வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு! மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு!!

 -MMH 

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் 4 மணி நேரமாக பெய்த கடும் மழையினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதன் காரணமாக வால்பாறை பகுதி சுற்றிலும் உள்ள நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன்காரணமாக வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்களும் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ மாணவியரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். அக்காமலை, சின்னக்கல்லார் சோலையார் டேம், கூழாங்கல் ஆறு ஆகிய பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

   

இதன் காரணமாக மக்கள் யாரும் ஆறுகளில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ மற்றும் எந்த காரணத்துக்காகவும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க  வேண்டும் என காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், திவ்ய குமார்.

Comments