முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது!!

   -MMH 

   ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில்  மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் நிகழ்ந்த  ஹெலிகாப்டர்  விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.  எதிர்பாராமல் நிகழ்ந்த இவ்விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இச்சம்பத்தை தொடர்ந்து பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 14 ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி  சார்பில்   கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள காமராஜர் புரம் பகுதியில் பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் முப்படை  தலைமை தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தி அக்கட்சியினர் முழக்கமிட்டனர்.  இந்நிகழ்வில்  மாநில துணை தலைவர் அழகு ஜெயபாலன் தெற்கு தொகுதி பொருட்பாளர் காலனி வெங்கடாச்சலம்,மாநில பேச்சாளர் தாமஸ் வர்க்கிஸ்,காட்டூர் சோமு,மாவட்ட செயலாளர் சர்க்கில் பிரிவு தலைவர் சுரேந்திரன்,டிவிசன் தலைவர்கள் சிவாஜி,லோகு, தண்டபாணி மற்றும் ரவி,மணி,நாகராஜ், ஆறுமுகம், உதயகுமார் ,சுரேஷ்,ரங்கராஜ்,பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments