எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் உரிமை கூட்டணியின் நான்காவது மாநில மாநாடு!

   -MMH 

   காரைக்குடியில் மக்கள் உரிமை கூட்டணியின் நான்காவது மாநில மாநாடு நடைபெற்றது. தொல்காப்பிய நினைவு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை தமிழ் கார்த்திக் நிகழ்த்தினார்.

மக்கள் உரிமை கூட்டணி நிறுவனர் தென்பாண்டியன் தலைமையேற்க, சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பேராசிரியர் கோச்சடை, தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் கர்ணன், தமிழக மக்கள் மன்றம் தலைவர் சமீ.ராஜ்குமார் மற்றும் மஜீத் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாநாட்டில் நீண்ட நாட்களாக சிறையிலிருக்கும் 7 தமிழர் மற்றும் அரசியல் சிறைவாசிகளில் சாதி, மத பேதம் பாராமல் அனைத்து சிறைவாசிகளையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழகமெங்கும் குழந்தைகளுக்கெதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகளை தடுக்க தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், 

ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும்,பணியிடங்களில் பாலியல் பிரச்சினைகளை தடுக்க விசாகா விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு தொண்டாற்றி வரும் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

தந்தை பெரியார் விருது கங்காதரன் அவர்களுக்கும், அம்பேத்கர் விருது பசீர் அவர்களுக்கும், பழனிபாபா விருது காந்தி அவர்களுக்கும்,வள்ளியம்மை விருது மகாலட்சுமி அவர்களுக்கும்,நம்மாழ்வார் விருது மரம் ராஜா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் உமர் பாரூக் நன்றி உரை நிகழ்த்தினார்.

- பாருக், சிவகங்கை.

Comments