குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை புலிகள்! நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை! !
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலக குடியிருப்பு பகுதிக்குள் பகல் நேரங்களிலேயே சிறுத்தை புலிகள் நடமாட்டம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த பயத்துடனும் அச்சத்துடனும் உள்ளனர். அந்தப் பகுதியில் தான் வனவிலங்கு சரணாலய அலுவலகம் உள்ளது.
இந்த இடங்களை சுற்றி அதிக அளவு புதர் மண்டி கிடக்கிறது இந்த சூழ்நிலையில் வன விலங்குகள் உள்ளே சென்று மறைந்து கொண்டாலும் யாருக்கும் தெரிவதில்லை.
இதைச் சுற்றிலும் துளசிங்க நகர், காமராஜ் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி,விளையாட்டு மைதானம் போன்றவை உள்ளன. எனவே பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சுற்றிலுமுள்ள புதர்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-S.ராஜேந்திரன், திவ்ய குமார் வால்பாறை.
Comments