இந்திய ராணுவ தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது! அவரது கதி என்ன?

   -MMH 

    நீலகிரி மாவட்டம், வெலிங்கடன் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் அதில் பயணித்துள்ளனர்.

இன்று காலை 11 - 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் இதுவரை ஏழு பேர் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. மீதமுள்ளவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இதுவரை ஐந்து பேர் மீட்கப்பட்டு, வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப்படையும் உறுதிசெய்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை, தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது. சுமார் ஒன்றரை மணிநேரமாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

விமானம் விழுந்து நொறுங்கிய இடம் வெலிங்டனில் இருந்து சுமார் 3.85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 24 பேர் வரை பயணம் செய்யக்கூடிய விபத்துக்குள்ளான இந்த Mi-17 V5 வகை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி, அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள், எல்.எஸ்.லிட்டர், ஹர்ஜிந்தர் சிங் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இன்று வெலிங்டன் செல்ல உள்ளதாக தெரிகிறது.

உலகின் மிக உயரிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட, ரஷ்யாவின் கசன் நிறுவன தயாரிப்பான எம்.ஐ - 17வி5 என்ற ராணுவ ஹெலிகாப்டரில் இவர்கள் பயணம் செய்துள்ளனர். தலைமை ஜெனரல் பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புப் பிறகே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 11.47 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டிருக்கிறது. இந்த விபத்தானது மதியம் 12.20 மணிக்கு, அதாவது வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு 10 கி.மீ தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்தது. மிகுந்த போராட்டத்திற்குப்பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் .நடைபெற்று வருகிறது

ராணுவ போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணிக்கமுடியும். மேலும், மோசமான வானிலையையும் சமாளித்து பறக்கக்கூடிய திறன் வாய்ந்தது இந்த ஹெலிகாப்டர். ஹெலிகாப்டரின் எரிபொருள் கொள்ளளவும் அதிகம். ஒருவேளை தொழில்நுட்ப கோளாறால் விபத்து நிகழ்ந்திருந்தால் எரிபொருள் முழுவதுமாக எரிந்திருக்கலாம் என்றும், இதனால் தீயை அணைப்பது சிரமமாக இருந்திருக்கலாம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்திருக்கின்றனர்.

- பாரூக், 

Ln இந்திராதேவி முருகேசன் / சோலை ஜெய்க்குமார்.

Comments