திமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட அதிமுகவினர்!!

   -MMH 
   திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பாப்பான்குளம் ஊராட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன்ex.MLA அவர்கள் தலைமையில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் முன்னிலையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர், பாப்பான்குளம் ஊராட்சி கழக செயலாளர், பாப்பான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் திரு.K.வஞ்சியப்பன் பாப்பான்குளம் மேற்கு கிளைக் கழகச் செயலாளர்  R.இளங்கோவன் பாப்பான்குளம் கூட்டுறவு சங்க நிர்வாக உறுப்பினர்  N.மகாலிங்கம் பாப்பான்குளம் கிளை அம்மா பேரவை செயலாளர்  S.பாக்கியராஜ் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் E.சதீஷ்குமார் பாப்பாங்குளம் கிளைக் கழக பாசறை செயலாளர்  P.ரகுபதி ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி தாய் கழகமான திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாப்பான்குளம் ஊராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments