பெண்களுக்கான இலவச புற்றுநோய் மருத்துவ பரிசோதனை முகாம் !

-MMH

     கோவை துடியலூர் அருகே மார்ட்டீன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மூன்றாவது முறையாக பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரொட்டியரின் ப்ராஜெக்ட் சேர்மன் விஜயகிரி, உதவி ஆளுநர் கணேஷ்குமார், ஜி.ஜி.ஆர் ஜெயகாந்தன், ரெட்டேரியன் தியாகராஜன், ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர் ஆக்ருதி தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன், செயலாளர் சப்னா சாஜத், கல்லூரி நிர்வாக அலுவலர் டாக்டர் மார்டினா ஜான்பால், கல்லூரி முதல்வர் செந்தில்குமரன்,  ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். 

இது குறித்து, மார்ட்டின் அறக்கட்டளை நிறுவனர் லீமா ரோஸ் மார்ட்டின் கூறுகையில், மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் மற்றும் கேஎம்சிஎச் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் கல்லூரியில் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருமுன் காப்பது போல பெண்கள் இதுபோன்ற முகாமினை பயன்படுத்தி ஆரம்பநிலையிலேயே இதன் தன்மையை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதுவரை சுமார் 200 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 42 பேருக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4500 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை இந்த முகாமில் மூலம் இலவசமாக செய்து கொடுக்கப்படுகிறது. இந்த முகாமினை பெண்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதில் கேஎம்சிஎச் மருத்துவர்கள் செவிலியர்கள் டெக்னீசியன் ஆக்ருதி உறுப்பினர்கள், ரோட்டரியன்ஸ், ரோட்டிராக்ட்  நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments