முறிந்து விழும் மின்கம்பங்களால் பொதுமக்கள் பீதி! மின்கம்பங்களில் தரத்தை ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்! !

   -MMH 

   சூலுாரில் திடீரென முறிந்து விழுந்த மின் விளக்கு கம்பங்களால் பரபரப்பு ஏற்பட்டது.சூலுார் பேரூராட்சி வழியாக செல்லும் திருச்சி ரோடு சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. ரோட்டின் நடுவில் 'சென்டர் மீடியன்' கற்கள் வைக்கப்பட்டும், நடுவில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் இருந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து, பேரூராட்சி நிதியில் ஓராண்டுக்கு முன் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த விளக்குகள் அடிக்கடி முறிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது.சில மாதங்களுக்கு முன், அரசு மருத்துவமனை அருகில் இரு கம்பங்கள் முறிந்து விழுந்தன. நேற்று, சூலுாரில் உள்ள தனியார் கல்லுாரி அருகே இருந்த மின் விளக்கு ஒன்று திடீரென முறிந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது; நல்ல வேளையாக வாகன ஓட்டிகள் மீது விழவில்லை. பேரூராட்சி ஊழியர்கள் வந்து கம்பத்தை அப்புறப்படுத்தினர்.பொதுமக்கள் கூறுகையில்,'தரமில்லாமல் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் பலமாக காற்று அடித்தால் முறிந்து விழுகின்றன. அனைத்து கம்பங்களின் உறுதி தன்மையை அடிக்கடி ஆய்வு செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments