தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்!!

     -MMH 

தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை புரிந்துள்ளார். நேற்று மாலை திருச்சிக்கு விமானம் மூலம் வந்தவர் சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு வந்தடைந்தார். 

தஞ்சாவூரில் அண்ணா, கலைஞர் மற்றும் ஜி கே மூப்பனார் உருவ சிலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் சங்கம் ஹோட்டலில் இரவு தங்கினார். இன்று காலை தஞ்சை சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்  விழாவில் அவர் இலவச வீட்டு மனை மற்றும் முதியோர் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார் .

அதனைத் தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக  திருச்சி சென்று ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை திரு கே. என். நேரு (நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்) மற்றும் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கல்வித்துறை அமைச்சர்) அவர்களின் மேற்பார்வையில் கழக நிர்வாகிகள் மிகுந்த ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தஞ்சை மாநகர் முழுவதும் அவரது வருகையின் காரணமாக சுத்தப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டு புத்தம் புது பொலிவுடன் காட்சி அளிக்கின்றது .எங்கு திரும்பினாலும் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் காட்சியளிக்கின்றனர். இந்த விழாவில் திருவிழாவிற்கான ஏற்பாட்டினை மாவட்ட வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து முடித்துள்ளனர். முதலமைச்சரின் வருகை காரணமாக தஞ்சை மாநகர் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments