வால்பாறை கூழாங்கல் ஆறு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்! காவல்துறையினர் விசாரணை! !

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் கூழாங்கல் ஆறு ஓடுகிறது. அந்த வழியாக சென்ற சிலர் ஆற்றின் கரையோரத்தில் ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்த்து உள்ளனர். அவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் ,108 அவசர சிகிச்சை வாகனத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து வந்து விழுந்து கிடந்த அவரை பரிசோதனை செய்து உள்ளார்கள். அப்போது கீழே விழுந்து கிடந்வர் உயிரற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. அங்கு இருந்த காவல்துறையினர் உடனடியாக சடலத்தை கைப்பற்றி வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரின் உடல் கூர் ஆய்வுக்கு பிறகே அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும்,

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன்,

திவ்ய குமார் வால்பாறை.

Comments