குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளுக்கு அக்கா மலை பகுதியிலிருந்து குடிதண்ணீர் நடுமலை எஸ்டேட் பகுதி வழியாக வருகிறது.இந்த சூழ்நிலையில் நடுமலை எஸ்டேட் பகுதியில் குடி தண்ணீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் இது போன்று தண்ணீர் வீணாவதால் பொதுமக்களுக்கு வரவேண்டிய குடிதண்ணீர் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்வதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு குடிநீர் வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு குடிதண்ணீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

-S.ராஜேந்திரன்,

திவ்ய குமார் வால்பாறை. 

Comments