மேலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவிக்கு கொலை மிரட்டல்!

   -MMH 

    மேலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நாவினிப்பட்டி ஊராட்சி.இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் பீர் முகமது என்பவரின் மனைவி தௌலத் பீவி. 

சம்பவத்தன்று நாவினிப்பட்டியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவரின் மகன் செல்வம், ஊராட்சி மன்றத் தலைவரின் வீட்டிற்கு அரிவாளுடன் வந்து, அவரை மிகவும் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, ஊராட்சித் தலைவரின் கணவர் பீர் முகமது, செல்வத்திடம், அவருக்கு என்ன பிரச்சினை எனக் கேட்டபொழுது, கழிவு நீர் வாய்க்கால் என் வீட்டருகில் ஏன் கட்டவில்லை?, எனக் கேட்டு பீர்முகம்மதுவையும் தகாத வார்த்தைகளால் ஏசினாராம்.

அதற்கு பீர் முகமது, செல்வத்தின் வீட்டின் முன்பாக அரசு இடம் இல்லை, தனியார் பட்டா இடமாக இருப்பதால் இடத்தின் உரிமையாளரிடம் பேசிவருகிறோம். பேசி முடித்ததும் அப்பகுதியில் பணியை நிறைவு செய்வோம் எனக் கூறியும், கேட்காத செல்வம், அவரையும் தரக்குறைவாகப் பேசி, உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் எனவும் மிரட்டிவிட்டுச் சென்றாராம். இந்தச் சம்பவம் பற்றிய காணொலி பதிவுடன் மேலூர் காவல்நிலையத்தில் பீர் முகம்மது புகார் தந்ததையடுத்து, மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, செல்வத்தை தேடிவருகின்றனர்.

- மதுரை வெண்புலி.

Comments