மாநில அளவிலான டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா கோவையில் பிட்ஜி பயிற்சி மையம் சார்பில் நடைபெற்றது!!

   -MMH 

   கோவையில் பிட்ஜி பயிற்சி மையம் சார்பில் டென்னிஸ்  சாம்பியன்ஷிப் போட்டிகள் காளப்பட்டி சாலையிலுள்ள லிவோ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் 3 நாட்கள் நடைபெற்றது. போட்டிகளை கோயம்புத்தூர் டென்னிஸ் அகாடமி  தலைவர் சதீஷ் நாயர் தொடங்கி வைத்தார். போட்டியானது 5 பிரிவுகளில் நடைபெற்றது . 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒற்றையர், இரட்டையர்,   35க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்களுக்கான இரட்டையர் பிரிவு  உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள்  நடைபெற்றது.  நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகம்  முழுவதும் இருந்து போட்டியில்  பங்கேற்றனர். 16 வயதுக்கு மேற்பட்ட ஒற்றையர் பிரிவில் தருண் விக்ரம் முதலிடம், இரட்டையர் பிரிவில் சஞ்சய், ராமரத்தினம் ஆகியோர் முதல் இடமும் பெற்றிருந்தனர். 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வினோத் ஸ்ரீதர் முதலிடமும், இரட்டையர் பிரிவில் பரூக், பரத்  முதலிடமும் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பிரிய தர்ஷினி தர்ஷினி பேர் முதலிடம் பெற்றிருந்தனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புரோசோன்  மால் மேலாளர் ஐஸ்டின் மற்றும் பி.ஏ.எம். ஈவன்ட்  ஆகியோர்  செய்திருந்தனர். 

நிகழ்ச்சியில் பிஎஸ்ஜி டெக் உடற்கல்வி இயக்குனர் முரளி கிருஷ்ணன், துப்பாக்கி சுடும்  வீராங்கனை  நிவேதிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments