கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் இடத்தினையும் பார்வையிட்ட கழகப் பொறுப்பாளர்கள்!!

   -MMH 

     மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் மைவாடி ஊராட்சிக்குட்பட்ட ராஜாவூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் இடத்தினையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனையின்படி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவரும் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழகத்தின் பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி அவர்கள் பார்வையிட்டார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு  உறுப்பினர் M.ஜெயக்குமார், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் KS.செந்தில் குமார், K.ஐயப்பன், மைவாடி ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், மைவாடி ஊராட்சி செயலர் முகமது இசாக் 8வது வார்டு உறுப்பினர் ராஜசேகர் உட்பட கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments