கோவையில் இனி பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயம்!!

   -MMH 

    வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்களில் 'சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படுவது அதிகரித்துள்ளது. பொதுமக்கள் வந்து செல்லும் கட்டடங்கள், அலுவலகங்கள் அனைத்துமே பொது கட்டடங்கள் என்பதால், அனைத்து கட்டடங்களிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்' என்று போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகர பகுதிகளில் சிசிடிவி கேமரா நிறுவப்பட வேண்டிய கட்டடங்களை கண்டறிய வேண்டும், செயல்படும் சிசிடிவி இருக்கும் கட்டடங்களையும் அடையாளம் காண வேண்டும்' என்று உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் எத்தனை பொது கட்டடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, இன்னும் பொருத்தப்பட வேண்டியது எத்தனை என்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments