பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வாளர் தலைமையில் தீவிர வாகன தணிக்கை!!

   -MMH 

    வேலூர் மாவட்டம்: பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வாளர் தலைமையில் தீவிர வாகன தணிக்கை.

இருபத்தி ஒன்பதாம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்கள் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து வேலூர் அடுத்த பாகாயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா தலைமையிலான போலீசார் பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் வண்ணம் தடுக்கும் விதமாக நேற்று இரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் மேலும் அதே போல் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளிலும் தொடர் ஆய்வினை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-ரமேஷ், வேலூர்.

Comments