ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு இன்று தமிழக முதல்வர் அஞ்சலி..!!
நேற்று டெல்லியில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமுக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 11 மணி அளவில் சூலூர் விமான படை தளத்துக்கு வந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் குழுவினர் 11.40 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெல்லிங்டன் னுக்கு பறந்து சென்று கொண்டிருந்த நிலையில் சுமார் 12 20 மணி அளவில் குன்னூர் மலைப் பகுதியில் மேகமூட்டம் காரணமாக நிலைதடுமாறிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறியதில் முப்படை தளபதி உட்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் .
இந்த அதிர்ச்சித் தகவல் நாடெங்கும் காட்டுத்தீ போல பரவ ஜனாதிபதி , பிரதமர் உட்பட முக்கியத் தலைவர்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதை அறிந்த முதல்வர் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது மட்டுமல்லாமல் ' நாட்டின் வீர மகனை இழந்து விட்டேன்' என்ற அஞ்சலி வாசகத்தையும் வெளியிட்டு அஞ்சலிக்காக விமானத்தில் சென்னையிலிருந்து வந்த வெல்லிங்டன் முப்படை ராணுவ தளபதிகள் மற்றும் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
-சாதிக் அலி.
Comments