கோவை சி.எஸ்.அகாதமி பன்னாட்டுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கேம்பிரிட்ஜ் தேர்வில் உலக அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை!!

    -MMH 

கோயம்புத்தூர்: 

சி.எஸ்.அகாதமி பன்னாட்டுப் பள்ளியில் பயிலும் இரு  மாணவிகள் கேம்பிரிட்ஜ்   தேர்வில் உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளனர். உலகம் முழுவதும்உள்ள 40 நாடுகளில் நடைபெறும் கேம்பிரிட்ஜ் தேர்வுகளில், உலக அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்குக் கேம்பிரிட்ஜ் கற்றல் திட்டம் ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் அளித்தும் சர்வதேச கல்வி தகுதிகளில் முக்கிய இடத்தை அளித்தும் கெளரவப்படுத்துகிறது. 

இவ்வாண்டு கோவைசி.எஸ்.அகாதமி பன்னாட்டுப் பள்ளியில் பயிலும் வள்ளி விக்ரம் – மேம்பட்ட துணை நிலை (கிரேடு 11) பொருளாதாரப் பாடத்திலும் கிருஷ்ணா எஸ்.நாயர் – மேம்பட்ட துணை நிலை (கிரேடு 11) கணிதப் பாடத்திலும் கேம்பிரிட்ஜ் தேர்வில்உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளனர்.

இதனைப் பற்றி சிஎஸ் அகாதமி பன்னாட்டுப் பள்ளியின் கல்வி இயக்குநர் திருமதி. நித்யா சுந்தரம் அவர்கள் கூறும் போது மாணவ மணிகளின் கற்கும் திறனும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கற்பிக்கும் திறனும்  இவ்விருதுகளைப் பெற முக்கிய காரணமாக அமைந்தது எனக் கூறினார். மேலும் அவர், பன்னாட்டுக் கல்வியானது மாணவர்களின் சிந்தனைத் திறன் வளர சிறந்த அடித்தளத்தை உருவாக்கி தருகிறது. அதனால் இங்கு பயிலும்  அனைத்து மாணவர்களுக்கும் சிந்தனைத்திறனுடன் கூடிய கல்வியை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாண்டு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி வள்ளி விக்ரமும்  கிருஷ்ணாவும் உலக அளவில் முதலிடத்தைப்  பெற்றதை எண்ணிப் பெருமகிழ்வு அடைகிறேன் என்று கூறினார். 

பள்ளிவிழாவில் ‘சிறந்த கேம்பிரிட்ஜ் கற்றவர் விருதுகளை’ இரு மாணவியரும் பெற்றுள்ளனர். சி எஸ் அகாதமி  பன்னாட்டுப் பள்ளியின் மூத்த கல்வி ஒருங்கிணைப்பாளர் திருசோனி தாமஸ் அவர்கள், கூறும் போது இப்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டுவது மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்த தேர்வில் வெற்றி பெற வள்ளியும் கிருஷ்ணாவும் கடுமையாக உழைத்துள்ளனர். இம்மாணவச் செல்வங்கள் இருவரும் எதிர்காலத்தில் பல வெற்றிகளைப் பெற நான் வாழ்த்துகிறேன். இவ்வெற்றி உலக அளவில் இந்திய திறமைக்கு ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இந்நிலை தொடரும் பொழுது சி.எஸ் .அகாதமி பன்னாட்டுப் பள்ளியில் கல்வி பயிலும் ஒவ்வொருவருக்கும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

- சீனி,போத்தனூர்.

Comments