தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!

   -MMH 

   தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோவி செழியன்,மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி நீலமேகம், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

-மைதீன், தஞ்சாவூர்.

Comments