முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் மலர் அஞ்சலி!!

   -MMH 

   ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் நிகழ்ந்த  ஹெலிகாப்டர்  விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.  எதிர்பாராமல் நிகழ்ந்த இவ்விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இச்சம்பத்தை தொடர்ந்து பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 14 ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கோவை தேர்முட்டி வீதியில் பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். அத்துடன் முப்படை  தலைமை தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கமிட்டனர். 

 இந்நிகழ்வில்  இந்து மக்கள் கட்சி மாநிலசெயலாளர் T.C.செந்தில்குமார் மற்றும் சண்முக வடிவேல், கனபதி ரவி, V.V.மாணிக்கம், சிவக்குமார், எரியீட்டி வேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments