நீண்ட நாட்களுக்கு பிறகு பட்டப்பகலில் சூடுபிடிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் கேள்வி

   -MMH 

      கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தமிழக ரேஷன் கடைகளில்  பெறப்படும் ரேஷன் அரிசியை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அண்டை மாநிலமான கேரளாவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் ரேஷன் அரிசியை இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர  வாகனங்களில் கடத்தப்பட்டு வந்த நிலையில் சமீபகாலமாக ரேஷன் அரிசி கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தாலும் திரை மறைவில் ரேஷன் அரிசி கடத்தல் தங்குதடையின்றி அரசியல்வாதிகளின் துணையோடும் அதிகாரிகளின் துணையோடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

திரைமறைவில் நடைபெற்றுக்கொண்டிருந்த ரேஷன் அரிசி கடத்தல் இப்பொழுது பட்டப்பகலில் எந்த அதிகாரிகளுக்கும் பயப்படாமல் கிழவன் புதூர் வழியாக கேரளாவுக்கு இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் ரேஷன் அரிசி கடத்தல் தங்குதடையின்றி 24 மணி நேரமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள் அதே சமயம் அதிகாரிகள் நினைத்தால் ரேஷன் அரிசி கடத்தல்க்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் அதையேன் செய்ய தவறுகிறார்கள் என்ற கேள்வியும் முன்வைக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும் என்பது உண்மைதானோ பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments