வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு!!
கோவை ஆலாந்துறை அடுத்த கிளியகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு, 31. தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி, காலம்பாளையத்தில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்கு, பெற்றோருடன் பிரபு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்துள்ளார்.அப்போது, வீட்டின் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 3.25 சவரன் நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து, போலீசில் புகார் அளித்தார்.புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments