உருமாறிய ஓமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல்! சிங்கம்புணரியில் சுகாதாரத்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்!

   -MMH 

   உருமாறிய ஓமிக்ரான் கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்க, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வணிகர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு நேற்று பிரான்மலை சுகாதாரத்துறையினர் துண்டுப் பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரத்தில் சிங்கம்புணரி வணிகர்களிடம் அனைத்து பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்வசம் அணிதல், தேவையற்ற கூட்டங்களை தவிர்த்தல், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு, வணிகர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினார்.

மேலும் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் தனிநபர்கள் மற்றும் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இதர நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எவரையும் மேற்கண்ட அறிவுரைகளை கடைப்பிடிக்காதவர்களை நிறுவன வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். தவறும் பட்சத்தில் 1939ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரச்சாரத்தின் போது அனைத்து வணிகர்களிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


- அப்துல்சலாம்.

Comments