கோவை மாணவர்கள் சாதனை!

    -MMH 

   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை வடவள்ளி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரி வளாகத்தில் முனைவர் குமார் நேற்று அனைவரையும் பாராட்டினார்.

வெற்றி பெற்ற மாணவர்கள் குறித்து அவர் கூறியதாவது; "சிவகாசியில் நடைபெற்ற 62வது தமிழ்நாடு மாநில சீனியர் மற்றும் யூத் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள், நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில், இளமறிவியல் தோட்டக்கலை பிரிவில், மூன்றாமாண்டு பயிலும், மாணவன் ஜி. மகேஷ் , பெண்கள் பிரிவில், இளமறிவியல் தோட்டக்கலையில் நான்காம் ஆண்டு பயிலும் சினேகபிரியா, வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற போட்டியில் வேளாண்மை கல்லூரி மாணவர் மகேஷ் மாலத்தீவுக்கு எதிரான போட்டியில் இந்திய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி வென்றுள்ளார். மேலும் இலங்கை மாலத்தீவுகளுடன் முப்பெரும், நாடுகளில் தலைவர் கோப்பை கேரம் போட்டிகளிலும் பங்கேற்று தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதேபோன்று பஞ்சாப் மாநிலம் மோஹாலியில், டிசம்பர் 16 முதல் 18 வரை நடைபெற்ற 59வது, தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் தோட்டக்கலை முதலாமாண்டு பயிலும், மாணவி ஆர் அபிநயா, ஒரு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். அவர் தனது பத்து வயதில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

கடந்த 2019ஆம் ஆண் அவர் தனது பத்து வயதில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சிடில் ஸ்பெயின், பார்சிலோனாவில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்நாடு அணிக்கு தலைமையேற்று, இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தி உள்ளனர் எனவும், மேலும் இந்திய அணியின் சார்பில் நான்காவது இடத்தைப் பிடித்து தந்துள்ளதாக தெரிவித்தார்.மேலும், பல்வேறு மாநில தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் 124 பதக்கங்களை வென்றுள்ளதாகவும், மாணவர்களின் சாதனைகளை பல்கலைக்கழக பதிவாளர்கள், முதன்மையர்கள் முனைவர்கள் என அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments