ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்...!!

   -MMH 

   கோவை மாநகரில்  திமுகவின் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடந்து வருகிறது.

திமுகவின் செயற்குழு கூட்டம் மாண்புமிகு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்களின் தலைமையில் கோவை மாவட்ட அனைத்து பொறுப்பாளர்கள் முன்னிலையில் கோவை மாவட்ட திமுக ஒன்றிணைந்த செயற்குழு கூட்டம் தற்போது நடந்து வருகிறது . காலை 10 மணிக்கு ஆரம்பித்த இந்த கூட்டம் மதியம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி , பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைப்பது , நிர்வாகிகளின் செயல்பாடுகள் , மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நலத்திட்டங்கள் போன்றவைகள் இக்கூட்டத்தில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து  கொள்ள வருகை தந்துள்ளனர்.

-சாதிக் அலி.

Comments