மு. க தமிழரசு மாமியார் மறைந்த ஜெயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி..!!

 

-MMH

    கோவை வடவள்ளி மறைந்த மு. க தமிழரசு மாமியார் ஜெயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று வடவள்ளி பகுதியில் வசித்துவந்த மு.க தமிழரசு அவர்களின் மாமியார் ஜெயலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார் இதை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனே தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார் பின்பு கார் மூலம் வடவள்ளி ஜெயலட்சுமி அவர்கள் வீட்டுக்கு சென்றடைந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் அவருடன் அவரது மனைவி திருமதி துர்கா ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் , போலீஸ் உயரதிகாரிகள் பலரும் உடன் இருந்து அஞ்சலி செலுத்தினார்.

-சாதிக் அலி.

Comments