வால்பாறை அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிப்பதாக பொதுமக்கள் பெருமிதம்!! மருத்துவமனை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி!!!

    -MMH 

    கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு அனைத்து விதமான மக்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதற்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும் மகளிருக்கான பிரசவ வார்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வால்பாறை அடுத்துள்ள கல்லார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் (54).ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பேபி கமலம்(58) தாய்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஒரு பெண் என மூன்று பேருக்கு சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ளனர் .

எனவே வால்பாறை அரசு மருத்துவமனையையும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரையும் பொதுமக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். 

இதனால் மருத்துவமனை மருத்துவர்களும் ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன், திவ்யகுமார் வால்பாறை.

Comments