தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் காவல்துறையினர் அதிரடி சோதனை! உரிமையாளர் கைது! !

   -MMH 

   புகையிலைப் பொருட்களை(குட்கா) விற்பனை செய்ய தமிழக அரசு  தடைவிதித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் காவல்துறையினருக்கு தெரியாமல் ஒரு சில கடைகளில் புகையிலைப் பொருட்கள் (குட்கா) விற்கப்படுவதாக பொதுமக்கள் கருதிக் கொண்டு இருந்தனர் இந்த சூழ்நிலையில் 

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் பெட்டிக்கடை வைத்திருப்பதாகவும், புகையிலை பொருட்களை ரங்கே கவுடர் வீதியில் உள்ள மொத்த விற்பனை குடோனில் இருந்து வாங்கி வருவதாக கூறினார்.

இதையடுத்து காட்டூர் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தி மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளரான வடமாநிலத்தை சேர்ந்த பூமேஷ் யாதவ் என்பவரை கைது செய்தனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments