கோவை போத்தனூர் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து கல்லூரி மாணவர் தற்கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை !!
கோவையை அடுத்த குனியமுத்தூர் இடையர்பாளையம் அருகே உள்ள இ.பி.காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் ஆன்டோ புகழ்ராயன் (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 10 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இதனால் இளங்கோவன், அவரை கண்டித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வெளியே சென்று வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு ஆன்டோ புகழ்ராயன் வெளியே சென்றார்.
பின்னர் அவர் போத்தனூர்-இருகூர் இடையே உள்ள தண்டவாளத் தில் தலை வைத்து படுத்துக்கொண்டார். நள்ளிரவு 12 மணியளவில் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தலை துண்டாகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து என்ஜின் டிரைவர் போத்தனூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆன்டோ புகழ்ராயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தந்தை-மகன் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது காதல் தோல்வி காரணமாக இந்த முடிவை எடுத்தாரா என்பது தெரியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை அருகே தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-S.ராஜேந்திரன்.
Comments