தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் வல்லுனர்கள் பங்கேற்ற இரண்டு நாள் பயிலரங்கம்!!

     -MMH 

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவை அரசுக் கலைக் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வணிக வரித்துறை சார்பாக இரண்டு பயிலரங்கம்  அரசு கலைக் கல்லூரி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் வல்லுனர்கள், கல்வியாளர்கள், இந்திய விஞ்ஞானிகள், தமிழ்நாடு நுகர்வோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நுகர்வோர் நலன் மற்றும்  நுகர்வோர் அமைச்சகத்தின் பங்களிப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. 

மேலும் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்ட திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதே போல் நுகர்வோர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு பயிலரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயிலரங்கில் 200 க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிரங்கின் இறுதி நாளான இன்று பாரதியார் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் காளிராஜ் கலந்து கொண்டு நுகர்வோர் நலன், வணிகவியல் துறையின் முக்கியதுவம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.

- சீனி,போத்தனூர்.

Comments