குப்பைகளை அள்ளாமல் தேங்கிக் கிடக்கும் அவலம்...!! பொதுமக்கள் அவதி..!!

   -MMH 

   திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து அருகாமையில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் குப்பை கழிவுகளை கொட்டி கொட்டி நிறைந்து வழிந்து சிதறி கிடக்கின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் குப்பைகள் தண்ணீரில் ஊறி துர்நாற்றம் வீசுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வழியே போகும் பொது மக்கள் நாற்றத்தை தாங்க முடியாமல் மிகுந்த சிரமத்துடன் அந்த இடத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது . ஆகவே மாநகராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவ்வப்போது குப்பைகளை சரிவர அள்ளி இதுபோன்ற அவலங்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

-பாஷா திருப்பூர்.

Comments