E-Shram மத்திய அரசு நலவாரிய அட்டை இலவச பதிவு முகாம் நடைபெற்றது!!

    -MMH 

    தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்களின் ஆணையின்படி ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறையின் விரிவாக்கத் திட்டம், மைவாடி ஊராட்சி மன்றம் மற்றும் அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை இணைந்து நடத்தும் E-Shram மத்திய அரசு நலவாரிய அட்டை இலவச பதிவு முகாமில் சிறப்பு விருந்தினராக மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவரும் மடத்துக்குளம் மேற்கு ஒன்றியக் கழகத்தின் பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி அவர்களும், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் KI.காவியா ஐயப்பன் அவர்களும்  கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலவாரிய அட்டையினை வழங்கினர். 

மேலும் மைவாடி ஊராட்சி மன்றத் துவக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகள்  அனைவருக்கும் முககவசம் வழங்கி அவர்களுக்கு தடுப்பு நடவடிக்கையை பற்றியும் அதன் விழிப்புணர்வு பற்றியும் விரிவாக மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார்.  இந்நிகழ்ச்சியில்  மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் V.மகாலிங்கம், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் N.சேதுபால், K.ஐயப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் தீபிகா முருகானந்தம்,  வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) P.சாதிக்பாட்சா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் Y.மதர்லேன் மேரி, மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் மகேஸ்வரி சிவக்குமார், ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி முனைவர் ராஜேஸ்வரி, தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் சங்கரமகேஸ்வரி, தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வடிவு, மைவாடி ஊராட்சி செயலர் முகமது இசாக் உட்பட கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments