கோவை மாவட்ட SDPI கட்சியின் தொண்டாமுத்தூர் தொகுதி ஆலோசனை கூட்டம்!!!

   -MMH 

   எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் நிர்வாகிகள் கூட்டம் இன்று கோவை மாவட்டம் கோட்டை மேட்டில் உள்ள SDPI கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தொண்டாமுத்தூர் தொகுதி SDPI கட்சி தலைவர் உமர் ஷெரீப் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வருகை தந்த வார்டு கிளை நிர்வாகிகளை வரவேற்று தொகுதியினுடைய செயலாளர் இப்ராஹிம் பாதுஷா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் 86வது வார்டில் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் அதே போல வரக்கூடிய டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் ஆர்ப்பாட்டம் கோவை ஆத்தபாலத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ளச் செய்யவேண்டும் என்றும் ஆகிய இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வார்டு தலைவர்கள் மீது ஹாமீத், அலி பாய், சபீர் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகிய வார்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக தொண்டாமுத்தூர் தொகுதியினுடைய துணை தலைவர் ரஃபிக் அவர்கள் நன்றியுரையாற்றினார்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments