ஜனவரி 11ல் கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை!!!!

   -MMH 

   சூயஸ் நிறுவனத்திடம் வழங்கிய கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகத்தை ஜனவரி 11 ஆம்தேதி பெருந்திரள் முற்றுகையிடுவது என சிபிஎம் கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் 23 ஆவது கோவை மாவட்ட மாநாடு மருதமலை பொதிகை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்திரராசன், பி. சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பாரதியார் பல்கலை கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். தேவையற்ற மேல்முறையீடுகளை அரசு செய்வதை கைவிட வேண்டும். அத்திக்கிடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள பேரூராட்சிகளை இணைக்க வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான மாற்று பாதைகள் ஏற்படுத்தாததின் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக மேம்பாலப்பணிகளை விரைவு படுத்தவும், அக்காலம்வரையில் மாற்று பாதைகளை உருவாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அத்தக்கூலிகளாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்திரப்படுத்த வேண்டும். மாதத்தின் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நகர்புறத்தில் சாலை வசதி உள்ளிட்டு நிறைவேற்றப்படும் அடிப்படை வசதிக்கான திட்டங்களை கிராமப்புறத்தையும் சமகாலத்தில் இனைப்பதற்கான பணிகளை செய்ய வேண்டும். ஈசா யோகா மையத்தின் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவை மாநகராத்தின் குடிநீர் விநியோகத்திற்கான திட்டங்களை கோவை மாநகராட்சியே செய்ய வேண்டும். பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 11 ஆம்தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தை பெருந்திரளாக முற்றுகையிடுவது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிற வரையில் தீவிரமான போராட்டத்தை முன்னெடுப்பது என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments