15 வயது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்..!!!

   -MMH 

    15 வயது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

ஓமே கிரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர்  அறிவித்திருந்தார். முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறார்கள் தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. தகுதியுடைய சிறார்கள் தங்களுடைய ஆதார் அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டை போன்றவைகளை வைத்து முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் இதுவரை பதிவிட படாத புதிய மொபைல் எண் மூலம் கோவின் இணையதளத்தில் சைன் உப் செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-சாதிக் அலி.

Comments