இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியில் பிரியாணி, சிக்கன் வழங்கி அசத்தும் சாய்பாபாகாலனி மாமுஸ் பிரியாணி!!

    -MMH 

    கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில்,பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழக அரசு தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழக அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கோவை சாய்பாபாகாலனி மாமுஸ்   பிரியாணி அசன்  மற்றும்  தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் முகம்மது ரபீக் ஆகியோர் இணைந்து தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு  அசத்தல் ஆபர் வழங்கி அசைவ பிரியர்களை ஆச்சரியபடுத்தி உள்ளார்.

அதன் படி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள மாமுஸ் பிரியாணி உணவகத்தில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி,சில்லி சிக்கன்,குஸ்கா, உள்ளிட்ட உணவு வகைகளை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படுகிறது . இதனால்  கடையில் குவிந்த பொதுமக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றுகளை காண்பித்து பிரியாணியை   ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 

இது குறித்து சாய்பாபாகாலனி மாமுஸ் பிரியாணி உரிமையாளர் ஜெமிருல்லா அசன் கூறுகையில், பொதுமக்கள் தடுப்பூசி இட்டுக்கொள்வதனை ஊக்கப்படுத்த இந்த 50 சதவீத தள்ளுபடி முயற்சியை மேற்கொண்டதாக கூறிய அவர், பிரியாணி , சில்லி சிக்கன், குஸ்கா உள்ளிட்ட அனைத்து வகைகளையும் இந்த ஆபரில் வழங்குவதாக தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments