அன்னூர் காவல் நிலையத்தில் புத்தாண்டை கேக் வெட்டிக் கொண்டாடிய காவலர்கள்..!!

    -MMH 

    கோவை மாவட்டம் அன்னூரில் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக அன்னூர் காவல் நிலைய காவலர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

தற்போது கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், பொதுவெளியில் கேக் வெட்டி கொண்டாடுவதற்கும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது . இந்த விதிமுறைகளை பொதுமக்கள் மீறாமல் பார்த்துக்கொள்ளும் வண்ணமாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணிகளிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பணி பணி சுமையின் காரணமாக மன அழுத்தத்தை போக்கும் விதமாக உள்ளூர் காவல் ஆய்வாளர் வித்தியா அவர்களின் தலைமையில் காவல் நிலையத்திலேயே காவலர்கள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்கும் விதமாக , மக்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந் நிகழ்வு நடத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் நித்யா சக காவலர்களுக்கு புத்தகங்களை வழங்கி கௌரவித்தார்.

-சாதிக் அலி.

Comments