சிக்னல் கிடைக்கல! செல்போன் கோபுரத்தில் ஏறிய நபர்!!

   -MMH 

கரூரில் செல்போனுக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக செல்போன் கோபுரத்தில்  ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது . கரூர் சின்னஆண்டான் கோவில் பகுதியில் உள்ள இரும்புக்கடையில் வேலை செய்து வரும் இளங்கோ (34) என்ற இளைஞர் புத்தாண்டு தினமான நேற்று மது அருந்தியுள்ளார் . பின்னர் தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக அவர் வேலை செய்துவரும் கடையின் அடுக்குமாடி குடியிருப்பு மேலுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி சிக்னல் கிடைக்கிறதா என சோதனை செய்துள்ளார் .

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் மற்றும் கரூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இளங்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . திடீரென்று மழை பெய்யத் துவங்கியதன் காரணமாக செல்போன் டவரில் ஏறிய நபர் கீழே இறங்கினார் . தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர் . தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக இளைஞர் செல்போன் கம்பத்தில் ஏறிய சம்பவத்தை தொடர்ந்து , பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது .

-N.V.கண்ணபிரான்.

Comments