'இல்லம் தேடி வரும் கல்வி' நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது‌!!

   -MMH 

      மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் நடுநிலைப்பள்ளிக்கு உட்பட்ட அல்லா கோவில் தெரு, பழனியம்மாள் நகர்  குடியிருப்புப் பகுதிகளில் கொரோனோ விடுமுறை கால கற்றல் இடைவெளியை பூர்த்தி செய்யும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிவித்துள்ள 'இல்லம் தேடி வரும் கல்வி' நிகழ்ச்சி ஆசிரியப் பெருமக்களால் நேற்று (3-1-2022) மாலை தொடங்கி வைக்கப்பட்டது‌.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் பேரூர் கழக செயலாளர் துரை‌.பாலமுரளி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் திரு V.மகாலிங்கம், திரு சுப்பிரமணியம், திரு P.விஜயகுமார், திரு தங்கதுரை, K.T.L திரு சுப்பிரமணியம், திரு G.செந்தில்குமார் உட்பட கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு, கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மாலை நேர இல்லம் தேடி வரும் கல்வி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்‌.

-துல்கர்னி உடுமலை.

Comments