கோவையில் ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு ! சுகாதாரத் துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை! !

   -MMH 

    லண்டனிலிருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோவையை சேர்ந்த, 69 வயது ஆண். லண்டனிலிருந்து சென்னை வழியாக கோவை விமான நிலையம் வந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., டெஸ்டில் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த, 20ம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரின் சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆய்வு முடிவில் நேற்று, அந்த நபருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது, அந்த நபருக்கு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''லண்டனிலிருந்து கோவை வந்த, 69 வயது ஆணுக்கு கடந்த, 20ம் தேதியன்று ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் சளி மாதிரிகளை சென்னைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் இரண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியுள்ளார்,'' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-சி.ராஜேந்திரன்.

Comments