குண்டும் குழியுமான சாலை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்!!

   -MMH 

   பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு மீன் கரை சாலையில் உள்ள ரயில்வே பாலம் மற்றும் பொள்ளாச்சியில் பிரபலமான  மாட்டுச்சந்தை அருகே சாலையில்  ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. 

இவ் வழித்தடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன குறிப்பாக கார், இருசக்கர வாகனங்கள் செல்லும் போது குழிகள் இருப்பது தெரியாமல் தடுமாறி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.  இதை அறிந்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர் என  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக  சரி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு  பொதுமக்கள்  கோரிக்கை வைக்கின்றனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments