இளம் வயதில் உலகை விமானத்தில் தனியாக சுற்றி வந்து சாதனை படைக்கும் இளம் பெண் ஜாரா ரூதர்போர்ட் கோவை வருகை!!

    -MMH 

  கோவை: இளம் வயதில் உலகை விமானத்தில் தனியாக சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெல்ஜியத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஜாரா ரூதர்போர்ட் கோவை வருகை தந்தார்.


பெல்ஜியத்தை சேர்ந்தவரான 19 வயதான இளம் பெண், ஜாரா ரூத்தர்போர்ட், இளம் வயதில் உலகை விமானத்தில் தனியாக சுற்றி வந்த இளம் பெண் என்ற சாதனையை படைக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பெல்ஜியத்திலிருந்து ஷார்க் ஏரோ என்ற சிறிய ரக விமானத்தில் தனது பயணத்தை துவக்கினார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, அமெரிக்கா, தென் அமெரிக்கா, கொரியா, இலங்கை நாடுகளுக்கு பயணித்த அவர் தற்போது கோவை விமான நிலையத்திற்கு தற்போது வருகை தந்துள்ளார். அவரது பயணத்திற்கு பொருளாதார உதவிகளை வழங்கி வரும் எல்.ஜி.நிறுவனம் சார்பில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், 

உலகில் உள்ள 52 நாடுகளை கடந்து இளம் வயது சாதனையாளராவதே தனது இலக்கு எனவும், ஐஸ்லாந்தில் எரிமலையின் மீதும், நியுயார்க் நகரத்தின் மீது பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். ரஷ்யாவில் காலச்சூழல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் பயணம் இனிமையாகவே இருந்ததாகவும், இளம் வயதில் உலகை சுற்றிவருவதே தனது இலக்கு எனவும் மேலும் பல பெண்களை ஊக்குவிப்பதே இந்த பயணத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். இதற்கு முன்பு 30 வயதுடைய அமெரிக்காவின் சேஷ்டா வெயிஸ் என்ற பெண்ணே உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற சாதனையை படைத்துள்ளதாகவும், அதனை முறியடிக்கும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். சுமார் 30 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்துள்ளதாக கூறிய ஜாரா, சிறுவயதிலேயே விமானம் ஓட்ட பழகியதாகவும் இளம் வயதில் உலகை சுற்றி வருவதற்கு விரும்பியதாகவும் கூறினார். தான் பார்த்தவர ஐஸ்லாந்து நாட்டில் தான் பாலின பாகுபாடு குறைவாக இருப்பதாக நினைப்பதாகவும், பாதுகாப்பாக பயணிப்பதே முதல் இலக்கு எனவும் சைபீரியா போன்ற ஆளரவமற்ற இடத்தில் சிக்கினால் மீட்புப்பணிக்கு பல மணி நேரம் ஆகலாம் என்பது போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள தமக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் ஜனவரி 13ம் தேதி பெல்ஜியத்தில் இப்பயணத்தை நிறைவு செய்கிறேன் எனவும் தெரிவித்தார். சராசரியாக 5 மணி நேரம் தினமும் பயணிப்பதாகவும், அனைத்து நாடுகளின் மக்களும் ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் கூறினார். கனவிருந்தால் பெண் என்பதற்காக தள்ளிப்போடாதீர்கள் எனவும் உங்களை கனவை நனவாக்க துணிந்து முன்னேறுங்கள் என்பதே சக பெண்களுக்கு தான் கூறும் கருத்து எனவும் அவர் தெரிவித்தார். இப்பயணத்திற்கு பிற்கு பொறியியல் படிக்க விரும்புவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments