தமிழக காவல்துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓசூர் அருகே சற்று முன் கைது!!

   -MMH 

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும்  அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய கடந்த மாதம் 17 ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 20 நாட்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் ஹசன் என்ற பகுதியில்  ராஜேந்திரபாலாஜி பதுக்கி இருப்பதாக செல்போன் சிக்னல், வைத்து காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.

இந்நிலையில் தனிப்படையினர் வருவதை அறிந்த ராஜேந்திர பாலாஜி  காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். காரில் சென்ற  ராஜேந்திரபாலாஜியை நடுரோட்டில் சினிமா பாணியில்  மடக்கிப் பிடித்து கைது செய்தது காவல்துறை. இதன் மூலம் 20 நாட்களாக ராஜேந்திரபாலாஜி ஆடிய ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து விரைவில் அவர் விருதுநகருக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக துணை  தலைமை நிருபர்

-M.சுரேஷ்குமார்.

Comments