கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் கோர விபத்து! - ஒருவர் உயிரிழப்பு!!

   -MMH 

   கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் பெரியநாயக்கன்பாளையம் அருகில் TN 37 D 6626 எண் கொண்ட கார் இரவு 12 மணி அளவில் அதிவேகமாக வந்து விபத்துக்குள்ளானது.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் அப்பளம் போல்  நொருங்கியதில் சம்பவ இடத்திலயே ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் காயத்துடன் தப்பினார்கள். இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுபவர்கள் கவனமாக சென்றால் அனைவருக்கும் நல்லது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப் கோவை .

போட்டோ உதவி: AK ஷபி.

Comments