ஒமிக்கிறான்:கிராமங்கள், குழந்தைகள் அதிக அக்கரை தேவை!..மத்திய அரசு அவசர கடிதம்?

  -MMH 

ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கிராமங்களிலும், குழந்தைகள் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் 1270 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் திடீரென தினசரி கேஸ்கள் 26 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை 34,887,983 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 26,404 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 481,519 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,275,312 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு சார்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், திடீரென கொரோன கேஸ்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் கேஸ்கள் அதிகரிக்கும் என்பதால் மருத்துவமனைகளை தயார் செய்யுங்கள்.

மத்திய அரசு கடிதம்

ஹோட்டல் அறைகளை தனிமைப்படுத்தும் வார்டாக்குங்கள். ஐசியூ பெட்களை தயார் செய்யுங்கள். மருந்துகள், ஆக்சிஜன் போதுமான அளவில் இருக்கிறதா என்று பாருங்கள். எல்லா மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் கொண்டு வரப்பட வேண்டும். சோதனைகள் உயர்த்தப்பட வேண்டும்.

ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்களுக்கு போதுமான கட்டுப்பாட்டு ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். எளிதாக பெட்களை புக் செய்யும் வசதி இருக்க வேண்டும். அதேபோல் மிக முக்கியமாக கிராமங்களிலும், குழந்தைகள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். கிராமங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

மேலும் குழந்தைகள் இடையே கொரோனா கேஸ்கள் உயர்கிறதா என்றும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் இந்த அவசர கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிராமங்களில் வேக்சின் சதவிகிதம் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது. வேக்சின் போட்டவர்களின் எண்ணிக்கை நகரத்தோடு ஒப்பிடும் போது இந்திய கிராமங்களில் குறைவாகவே உள்ளது.

ஓமிக்ரான் அபாயம்

இதனால் இங்கு ஓமிக்ரான் கேஸ்கள் பரவும் அபாயம் உள்ளது. அதேபோல் சிறார்களுக்கு இன்னும் வேக்சின் போடப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் கொரோனா, ஓமிக்ரான் பரவும் அபாயம் உள்ளது. இதன் பொருட்டே இவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

-N.V.கண்ணபிரான்.

Comments