கடந்த ஆண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர், எஸ்.எஸ்.கோட்டை அருகே தற்போது கைது!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில், காவல் சார்பு ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவல்துறையினர் வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், குளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கணேஷ் மகன் பாரதிராஜா (வயது 20) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பாரதிராஜா முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். 

இதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தீவிரபடுத்திய போது பாரதிராஜாவுக்கு கடந்த ஆண்டு மல்லாகோட்டையில் நடந்த ஒரு செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே, பாரதிராஜாவை எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் கைது செய்து, திருப்பத்தூர் கிளைச் சிறையிலடைத்தனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments