சிங்கம்புணரி அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக பெண் தற்கொலை!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், வடவன்பட்டியைச் சேர்ந்தவர் அருள்செல்வம். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்லம்பட்டியைச் சேர்ந்த வைஷ்ணவி (வயது 25) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன்  உள்ளார். கணவர் அருள்செல்வம் அயல்நாடு சென்ற நிலையில் வைஷ்ணவி அவரது தாயார் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் அயல்நாட்டிலிருந்து அருள்செல்வம் திரும்பி வந்த நிலையில், 15நாட்களுக்கு முன் வைஷ்ணவியை அவரது தாயார் வீட்டிலிருந்து கூட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வைஷ்ணவி எலி மருந்தைத் தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

உடனே வடவன்பட்டி கிராமத்தினர் வைஷ்ணவியின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க முயன்றுள்ளனர். இந்தத் தகவல் எஸ்.எஸ்.கோட்டை காவல்நிலையத்திற்குக் கிடைத்த நிலையில், அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றி, பிணக்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து வைஷ்ணவியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments