சேரன் மாநகர் பகுதியில் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம்..!!

   -MMH 

   22-வது வார்டுக்கு உட்பட்ட சேரன்மாநகர் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வினியோகம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடியே 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு  21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன்கள் வழங்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் ஆரம்பித்தது.

இதுபோல் சேரன் மாநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் திமுக நிர்வாகிகள் மேற்பார்வையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கோவை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் D.பிரபாகரன் , 22-ம் வட்ட பொறுப்பாளர் செல்வராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

-சாதிக் அலி.

Comments