செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு தமிழகத்திற்கு இரண்டாவது இடம்!!

   -MMH 

   செல்வமகள்சேமிப்பு கணக்குகள் திறந்த மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அஞ்சல் துறை, 'சுகன்யா சம்ரிதி' எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை  பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்த சேமிப்பு தொகை, கணக்கை முடிக்கும்போது மூன்று மடங்கு தொகை என, பல்வேறு பலன்கள் உள்ளதால், பலர் சேர்ந்து பயன் பெறுகின்றனர்.

கடந்த 2018 முதல் 2021ம் ஆண்டு வரை, 1.42 கோடிக்கும் அதிகமான புதிய கணக்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய அளவில், 29 லட்சத்து 12 ஆயிரத்து 632 புதிய கணக்குகளை திறந்து, உத்தர பிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 26 லட்சத்து 3,872 கணக்குகளை திறந்து, தமிழகம், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments