கோவையில் இதுவரை வரை பறக்கும் படையினரால் ரூ.1.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!!

       -MMH 

கோவை மாவட்டத்தில் நேற்று வரை பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில், 1.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

உரிய ஆவணங்கள் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், :-

ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம், பறிமுதல் செய்யப்பட்டு வட்டார கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தற்போது வரை, 1.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்து மண்டலத்துக்குட்பட்ட மாநகராட்சியில் மட்டும், 42 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றனர்

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments